பிரேசில், இந்தோனேசியா, துருக்கி அதிபர்களுடன் மோடி சந்திப்பு..!

share on:
Classic

ஜி20 மாநாட்டிற்கிடையே, பிரேசில், இந்தோனேசியா , துருக்கி அதிபர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு  நடைபெற்று வருகிறது.  இந்த மாநாட்டிற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி , பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரா , இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேசினார். மேலும், வர்த்தகம், முதலீடுகளில் சிறப்பு ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

News Counter: 
100
Loading...

vinoth