காலை 9.30 மணிக்கே பணிக்கு வர அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு..!

share on:
Classic

அமைச்சர்கள் அனைவரையும் காலை 9.30 மணிக்கே தங்கள் துறை அலுவலகத்துக்கு வர பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் பிரதமராக 2-வது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையில் 2 அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அனைவருக்கும் முன்னோடியாக மத்திய அமைச்சர்கள் செயல்படவேண்டும் என்றும் பணிக்கு உரிய நேரத்தில் வரவேண்டும் என்றும் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற உள்ள 40 நாட்களும் அமைச்சர்கள் யாரும் வெளியூர் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கும் எம்பிக்களும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்றும் எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan