மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் - மு.க. ஸ்டாலின்

share on:
Classic

மத்தியில் பிரதமர் மோடி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறும் முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் பாதித்த பகுதிகளை ஒரு வாரம் கழித்து ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை என்றும், ஆறுதல் செய்தி கூட கூறவில்லை என்றும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் பிரதமர் மோடி சர்வாதிகார ஆட்சி நடத்திவருவதாகவும், எனவே மத்திய, மாநில அரசுகளை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

News Counter: 
100
Loading...

Ragavan