மோடி மீண்டும் பிரதமராக கூடாது என்பதே எங்கள் நோக்கம் - திருமாவளவன்

share on:
Classic

மோடி மீண்டும் பிரதமராக கூடாது என்பது தான் எங்கள் கூட்டணியின் ஒரே நோக்கம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஆதரவாக திருமாவளவன் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “ அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து பாமகவை விலை கொடுத்து வாங்கியது. தேமுதிகவும் அப்படி தான் இணைந்தது. எனவே அது பேரம் பேசி உருவான கூட்டணி. ஆனால் திமுக கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவான கூட்டணி. எங்களுக்கு ஒரே நோக்கம் தான்,மோடி மீண்டும் பிரதமராக கூடாது. இது நாட்டுக்கு நல்லதல்ல, மக்களுக்கு நல்லதல்ல, ஜனநாயகத்திற்கு ஆபத்து, அரசியலமைப்புக்கு ஆபத்து, சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஆகவே அவர் பிரதமராக கூடாது என்று திமுக கூட்டணி விரும்புகிறது. பாஜக இந்துக்களின் பாதுகாப்பு அரண் என்றும், மோடி இந்துக்களின் பாதுகாவலர் என்று சொல்கிறார்கள். பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்கள் பாதிக்கப்படவில்லையா..? அவர் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றா அறிவித்தார். அதன் மூலம் அனைவருமே பாதிக்கப்பட்டனர்” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya