வரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..!

share on:
Classic

குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30-ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழா வரும் 30-ஆம் தேதி மாலை 7 மணியளவில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் என்றும், அப்போது அவருடன் கேபினட் அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan