பிரதமராக மீண்டும் பதவியேற்றதும் 7 நாடுகளில் மோடி சுற்றுப்பயணம்..!

share on:
Classic

நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்றதும் 7 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும், வெளிநாட்டு பயணத் திட்டங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

நரேந்திர மோடி 2-வது முறை பதவியேற்ற பின்னர், முதன் முறையாக ஜுன் மாதம் 13-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை கிர்கிஸ்தானில் நடைபெறும் SCO மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 28 மற்றும் 29-ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் பிரான்ஸ் நாட்டிற்கும், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

செப்டம்பர் மாதம் 3-வது வாரத்தில் நியூயார்க்கிலும், நவம்பர் மாதம் 4-ம் தேதி பாங்காங்க்கிலும், நவம்பர் மாதம் 11-ம் தேதி பிரேசில் உள்ளிட்ட இடங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan