தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..!

share on:
Classic

2-வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி இம்முறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பிரதமர் மோடி 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தன்னை 2-வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி இன்று அங்கு செல்கிறார். இதனையொட்டி, வாரணாசி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan