அக்‌ஷய் குமாரை விட சிறந்த நடிகராக விரும்பும் மோடி : காங்கிரஸ் விமர்சனம்..!!

share on:
Classic

அக்‌ஷய் குமாரை விட சிறந்த நடிகராக பிரதமர் மோடி விரும்புகிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் மோடியுடன் நடத்திய நேர்காணல் நேற்று அனைத்து தொலைகாட்சிகளிலும் ஒளிப்பரப்பானது. நேர்மையான அரசியலற்ற நேர்காணல் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் மோடி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா இது குறித்து பேசிய போது “ அக்‌ஷய் குமார் மிகச்சிறந்த நடிகர், அவரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் வெற்றிகரமான நடிகரும் கூட. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்களையும் அழித்து, நாட்டின் விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கையை நரகத்திற்கு தள்ளிய தோல்வியுற்ற அரசியல்வாதி தான் மோடி. அவர் தற்போது அக்‌ஷய் குமாரை விட சிறந்த நடிகராக விரும்புகிறார். வரும் மே 23ம் தேதி நிராகரிக்கப்பட உள்ள அவர், தற்போது பாலிவுட்டில் மாற்று வருவாய்க்காக முயற்சி செய்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya