அத்திவரதரை தரிசிக்க தமிழகம் வரும் பிரதமர் மோடி..!

share on:
Classic

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சித்தரும் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 23ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

கடந்த வாரம் 48 நாட்கள் வரை காட்சியளிக்கும் அத்திவரதரை மத்திய அமைச்சர் ரவிசங்கர பிரசாத் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தரிசித்தனர். அவர்களை தொடர்ந்து வரும் 23ம் தேதி சயன கோலத்தில் காட்சியளிக்கும் அத்திரவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.  அவருடன் பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் அத்திரவரதரை தரிசித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind