தோனிய உள்ள இறக்குங்க விராத் பாய்...! ரிஷாப் பண்ட்டை பந்தாடிய ரசிகர்கள்

share on:
Classic

ரிஷாப் பண்ட செய்த தவறைத் தொடர்ந்து, தோனியை களத்தில் இறக்குமாறு கேப்டன் கோலியை பார்த்து மொகாலி ரசிகர்கள் கூச்சல் எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ரிஷாபின் முதல் சொதப்பல்:
ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கையில் கிடைத்த வெற்றி வாய்ப்பை வீணாக பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் தோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். பரபரப்பான இந்த போட்டியின் 44-வது ஓவரை  ஆஸ்திரேலிய வீரர் டர்னர் எதிர்கொண்டிருந்தார். டர்னர் 38 ரன்களை குவித்திருந்த போது அவரை ஸ்டம்பிங் செய்ய ரிஷாப்பிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த ஓவரை வீசிய யுஸ்வேந்திர சாஹல் டர்னரின் லெக் சைடு பக்கமாக பந்தை வீசினார். இதை சற்றும் எதிர்பாராத டர்னர் எல்லைக்கோட்டை வெகு தொலைவாக கடந்து வந்து நின்றார். இந்நேரத்தில் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷாப், சாஹல் வீசிய பந்தை உரிய நேரத்தில் பிடித்து ஸ்டம்பிங் செய்ய முடியாமல் திணற, கையில் கிடைத்த விக்கெட்டை மிகவும் சாதாரணமாக நழுவ விட்டார். இது சாஹலையும், கோலியையும் ஒரே நேரத்தில் அதிருப்தியில் ஆழ்த்தியது. 

ரிஷாபின் 2-வது சொதப்பல்:
சாஹல் வீசிய மற்றொரு பந்து பேட்ஸ்மேனைக் கடந்து கீப்பர் பக்கமாக சென்றது. அப்போது, திரும்பி நின்றவாறு பந்தை பிடித்த ரிஷாப், தோனியின் பாணியை உபயோகப்படுத்தி ஸ்டம்பிங் செய்ய முயன்றார். ஆனால், ’தோனி ஒருவரே எப்போது ஒரே தோனி’ என்பதை நிரூபிக்கும் விதமாக ரிஷாபால் சரியாக குறி வைத்து பின்னாடி திரும்பி நின்றவாறு ஸ்டம்பிங் செய்ய முடியவில்லை. இதன் விளைவு, ரன்களை உதிரியாக வாரி வழங்கியதே ஆகும். இதைக்கண்ட கேப்டன் விராத் கோலி, ’ரிஷாப் என்ன பண்ணிட்ருக்க?’ என்று குரல் எழுப்பியவாறே இரண்டாவது முறையாக கடும் அதிருப்தி அடைந்தார். 

ரிஷாபின் 3-வது சொதப்பல்:
தேவையில்லாத ஒரு ஸ்டம்ப்பிங்கிற்காக ’ரிவியூ’ கேட்டார் ரிஷாப். இதுவும் ’நாட்-அவுட்’ என பலனளிக்காமல் போனதால் கோலியின் அதிருப்திகள் கோபமாக உருவெடுத்தது. விக்கெட் விழுந்ததா?...இல்லையா? என்பதே சரியாக தெரியாமல் ரிஷாப் செயல்பட்டதாக கோலி திட்டித்தீர்த்தார். 

Pant's mistakes...!! pic.twitter.com/qyo9Kpkdox

— Vidshots (@Vidshots1) March 10, 2019

தோனியை அழைத்த ரசிகர்கள்:
ரிஷாப்பின் செயலை கோலி மட்டுமல்ல, மொகாலி அரங்கில் அமர்ந்திருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் பார்த்து சற்று எரிச்சலடைய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில், ’விராத் பாய் பிளீஸ் தோனிய களத்துல எறக்குங்க’ என கூச்சலிட்டனர். ரசிகர்களின் இந்த கூச்சலானது பவுண்டரி அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கோலியின் காதுகளை எட்டத் தவறவில்லை. இருந்தாலும், எதுவும் செய்ய முடியாமல் அப்படியே நின்று விட்டார் நம்ம குட்டித்தல கோலி. இந்த போட்டியில் டர்னர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Mohali Crowd today #INDvsAUS pic.twitter.com/MBDWcbr8Ht

— POWERSTAR (@Teja_PSPK99) March 10, 2019

News Counter: 
100
Loading...

mayakumar