மகன் இறந்த துக்கம் தாங்காமல் உயிரிழந்த தாய்

share on:
Classic

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் இரண்டே நாளில் தாய் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ், ஓட்டுநராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பிரான்சிஸ் கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். மகனது இறப்பினால் அவரது தாயார் ராயம்மாள் கடும் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். மகன் இறந்த இரண்டே நாளில்  தாயும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind