இளமையை மீட்டெடுக்க 1 ஸ்பூன் பாசிப்பருப்பு போதும்..!! ஆச்சர்யமூட்டும் மருத்துவகுணம்..!

share on:
Classic

பாசிப்பருப்பு ஒரு சத்தான உணவு பொருள் மட்டுமல்ல. அதில் பல வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் உள்ளது.

பாசிப்பருப்பை பயன் படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்தினால், அது நம் தோற்றத்தை 10 வருடம் இளமையாக மாற்றும் வல்லமை பெற்றது. இப்போது அதை சரும அழகுக்கு எப்படி உபயோகிப்பது என பார்ப்போம்.

பயன்பாட்டு முறையும், பலனும்..!!
1. முக சருமம் சீரில்லாமல், மேடு பள்ளமாக இருந்தால், தினமும் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு செய்தல், முகம் சமமாக, அழகாக காணப்படும்.

2. பாசிப்பருப்பு பொடியை 1/2 ஸ்பூன் அளவு எடுத்து, 1 ஸ்பூன் தேனில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் 1 அல்லது 2 முறை இதை செய்து வந்தால், ஒரே வாரத்தில் முகப்பருக்கள் நீங்கி, முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். பருக்கள் இருந்த அடையாலம் கூட தெரியாமல் முகப்பரு தழும்பையும் நீக்கும்.

3. சரும நிறம் அதிகரிக்க, 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 ஸ்பூன் பாசிப்பருப்பை கலந்து முகத்தில் மாஸ்க் போல தடவவும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். வறண்ட சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றுக்கு பதிலாக பால் கலந்து பயன்படுத்தவும்.

4. சருமம் மிருதுவாக பட்டு போல இருக்க, வாரம் இருமுறை 2 ஸ்பூன் பாசிப்பருப்புடன், பாலாடை கலந்து முகம், கழுத்து பகுதிகளில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

5. வெப்பத்தால் முகம் கருமையடைந்திருந்தால், 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1/2 ஸ்பூன் பாசிப்பருப்பை கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

6. பாசிப்பருப்பு முக சுருக்கத்தை போக்கும் வல்லமை கொண்டது. 1 ஸ்பூர் பாசிப்பருப்புடன் தேவையான அளவு ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி வந்தால் சுருக்கம் நீங்கும்.

7. சிறிது தயிருடன், 1 ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியை கலந்து முகத்தில் தடவி, காய்ந்ததும் கழுவினால், முகத்தில் இருக்கும் சோர்வு, கருமை மறைந்து பொலிவுடன் இருக்கும்.

8. வாரம் ஒருமுறை கால் கப் நெல்லிக்காய் ஜூஸுடன் 1 ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியைக் கலந்து கூந்தலில், 20 நிமிடம் பயன்படுத்தினால் கூந்தலின் வேர்க்கால்களில் உள்ள பாதிப்புகள் குறைந்து தலைமுடி ஆரோக்கியமாக வளரும்.

மேலும், தலைமுடியை சுத்தப்படுத்த ரோஸ் வாட்டர் மற்றும் பொடித்த ஓட்ஸுடனும், பொடுகை நீக்க வேப்பிலை சாற்றுடனும், கூந்தலை பளபளப்பாக்க ஆப்பிள் சைடர் வினிகர், ரோஸ் வாட்டர், தேங்காய் எண்ணெயுடனும் 1 ஸ்பூன் பாசிப்பருப்பை கலந்து பயன்படுத்தி வந்தால், 50 வயது மிக்கவர்கள் கூட 25 & 30 வயது போல சரும ஆரோக்கியத்துடன் இருப்பர்.

News Counter: 
100
Loading...

Ragavan