போலி மது அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116-ஆக உயர்வு

share on:
Classic

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் போலி மதுவை அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் போலி மது அருந்திய 116 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலி மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போலி மது விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலி மது விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind