மேலூர் மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்...

share on:
Classic

மேலூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக மார்கழி மாத கடைசி வெள்ளியன்று மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி அங்குள்ள நாட்டார்முக்தி கோவிலில் கோவில் காளை அவிழ்க்கப்பட்ட பின்னர் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட காளைகளை, காளை உரிமையாளர்கள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர்.

இதனை ஏராளமான மஞ்சுவிரட்டு ரசிகர்களும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்று காளைகளை அடக்க முற்பட்டனர். சீறிபாய்ந்த காளைகளை இளைஞர்கள் அடக்கி உற்சாகத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

News Counter: 
100
Loading...

aravind