ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு..?

share on:
Classic

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று  தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், தூத்துக்குடியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை  எதிர்ப்பு இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால்  தூத்துக்குடி பகுதியில் பழைய பேருந்து நிலையம், விவிடி  சிக்னல், அண்ணா நகர், குரூஸ் பர்னாந்து சிலை உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், ஸ்டெர்லைட் ஆலையை  சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் ஒரு பதட்டமான சூழ்நிலை மீண்டும் உருவாகி உள்ளது.

News Counter: 
100
Loading...

youtube