அங்கீகாரமில்லாமல் செயல்படும் 700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் : வரும் கல்வியாண்டில் மூடப்படும் என தகவல்..

share on:
Classic

தமிழகம் முழுவதும் அங்கீகாரமில்லாமல் செயல்பட்டு வரும் 700க்கும் மேற்பட்ட பள்ளிகள் வரும் கல்வியாண்டு முதல் மூட பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. 

தமிழகத்தில் 4382 தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் எல்கேஜி முதல் ஆறாம் வகுப்பு வரை, எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை, எல்கேஜி முதல் 10-ம் வகுப்புவரை என பல்வேறு பிரிவுகளில் இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. தொடர் அங்கீகாரம், ஆண்டுதோறும் புதுப்பிக்கும் அங்கீகாரம் என இரு பிரிவாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகள் குறித்த பட்டியலை இயக்குநரகத்துக்கு ஒப்பைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.  இதன்படி, திருப்பூர் 86, சேலம் 53, திருவள்ளூர் 48, சென்னை 7 என தமிழகம் முழுவதும் மொத்தம் 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர். இந்த பள்ளிகளை மூட மே 23 ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.
 

News Counter: 
100
Loading...

Ramya