காலை 11 மணி நிலவரம் : தமிழகத்தில் 30.62% வாக்குப்பதிவு..

share on:
Classic

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக ஆரணியில் 36.51% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக சென்னையில் 22.7% வாக்குப்பதிவும் நடந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக இதுவரை 305 இயந்திரங்கள் மாற்றப்பட்ட்டுள்ளன. 525 ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் மற்றப்பட்டுள்ளன. பூத் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அரை மணி நேரத்தில் அவை மாற்றப்படும். பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்காளார் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர் அடையாள அட்டை மூலம் வாக்களிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

Ramya