"காங்கிரஸ் குடும்பத்தினர் ஜாமீனில் தான் வெளியே உள்ளனர்"

share on:
Classic

காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஜாமீன் அல்லது முன் ஜாமீனில் தான் வெளியே இருப்பதாக பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

சட்டீஸ்கரில் ஆட்சியை இழந்த பிறகு முதன்முறையாக பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் மோடி, சட்டீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், அதனை தடுப்பதில் மட்டுமே குறியாக இருப்பதாக குற்றம்சாட்டினார். சட்டீஸ்கரில் மோடி கேர் திட்டத்தை நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு மறுப்பதாக குற்றம்சாட்டிய அவர், சிபிஐயைக் கண்டு பயப்படுவதாகவும் சாடினார். ஊழல் செய்யாதவர்கள் எதற்கு பயப்படவேண்டும் என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலனவர்கள் ஜாமீன் அல்லது முன்ஜாமீனில் தான் வெளியே இருப்பதாகவும் சாடினார்.

News Counter: 
100
Loading...

vinoth