வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து..தாய், மகள் உயிரிழப்பு..!

share on:
Classic

சென்னையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

புளியந்தோப்பு  வெங்கடேசபுரம் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் வெங்கடேசனின் மனைவி சங்கீதாவும், அவர்களது 8 வயது மகளான யுவஸ்ரீயும் படுகாயம் அடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சங்கீதா உயிரிழந்த நிலையில், சிறுமி யுவஸ்ரீ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind