கூடுதல் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட்ட ’நட்பே துணை’ படம்..!!

share on:
Classic

திரையரங்குகளில் வெளியான சில படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் நட்பே துணை படத்தை தூக்கிய திரையரங்குகளில் மறுபடியும் திரையிடப்பட்டுள்ளது.

மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிச்சிருந்த படம் தான்  நட்பே துணை. அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கிய இந்த படத்தை அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் சுந்தர் சி தயாரித்துள்ளார்.

நட்பே துணை படத்தில் ஆதியுடன் இணைந்து யூடியூபிள் பிரபலங்களான விக்னேஷ்காந்த்,எருமை சானி புகழ் விஜய் ,ஷா ரா ,ராஜ் மோகன் போன்றவர்களும் .கரு.பழனியப்பன்,கௌசல்யா,ஹரிஷ் உத்தமன் போன்ற சீனியர் நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

நட்பே துணை படம் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்னதான் படம் நல்ல இருந்தாலும்  இந்த வாரம் அதிக புது படங்கள் வெளியானதால் நட்பே துணை படத்தை சில திரையரங்கில் மட்டும் தான் திரையிடப்பட்டுள்ளது. அனால் இந்த வாரம் வெளியான சில படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் நட்பே துணை படத்தை தூக்கிய திரையரங்குகளில் மறுபடியும் திரையிடப்பட்டுள்ளது.  இந்த தகவலை ஹிப் ஹாப் தமிழா ஆதி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  மேலும் இந்த படத்தை மறுபடியும் அதிக திரையறங்கில் திரையிடப்பட்டதுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி நன்றியும் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan