“பாகிஸ்தான் பிரதமர் பிச்சை எடுக்கிறார்” - சிந்து முதலமைச்சர் விமர்சனம்

share on:
Classic

நாட்டின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  பிச்சை எடுப்பதாக பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தின் முதலமைச்சர் முராத் அலிஷா குற்றம்சாட்டியுள்ளார்.

இம்ரான்கான் பிச்சை எடுக்கிறார்:

பாகிஸ்தானின் நிதிநெருக்கடியை சமாளிக்க பிரதமர் இம்ரான் கான் நாடு நாடாக சென்று பிச்சை எடுக்கிறார் என்று சிந்து மாநிலத்தின் முதலமைச்சர் முராத் அலி ஷா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மட்லி என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று பேசிய அவர், உலகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இம்ரான் கான் பிச்சை எடுப்பதாகவும், அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத நபர் பிரதமராக ஆட்சி நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். சமீபத்தில் அளித்த தொலைக்காட்சியிலும் தொடர்ந்து இம்ரான் கானை விமர்சித்து அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
 

 

ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானுக்கு உதவி:

பாகிஸ்தானின் நிதி நெருக்கடியை சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானுக்கு உதவ முன் வந்துள்ளது.  இளவரசர் முகமது பின் சையது அல் நஹ்யான் 6.2 பில்லியன் டாலர் வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 6.2 டாலரில் 3.2 பில்லியன் எண்ணெய் வர்த்தகத்துகாகவும், மீதமுள்ள 3 பில்லியன்  கையிருப்புக்காகவும் வழங்க உள்ளதாக தெரிகிறது. அவர் கடந்த வாரம் பாகிஸ்தான் வந்திருந்த போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது.
 

 

மற்ற நாடுகளுடனும் பேச்சுவார்த்தை:

சவுதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கி உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் 7.2 பில்லியன் அளவுக்கு சேமிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இயற்கை எரிவாயுவின் விலை சலுகைகளுக்காக பாகிஸ்தான் கத்தார் நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த நவம்பரில் பொருளாதார உதவிகளுக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனா சென்றது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

aravind