’மிஸ்டர். லோக்கல்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு..!!

share on:
Classic

மிஸ்டர். லோக்கல் படத்தின் கலக்கலு மிஸ்டர் லோக்கலு என்ற பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில்  குறிகிய காலத்திலே உச்சத்துக்கு வந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன்.இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தான் மிஸ்டர். லோக்கல். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சதிஷ், யோகிபாபு, ராதிகா சரத்குமார், ரோபோசங்கர், பிரகாஷ் ராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரிச்சுருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.  

காமெடி படங்களுக்கு பெயர் போன இயக்குனர் எம் ராஜேஷ் சிவகார்த்திகேயன் உடன் இணையும் முதல் படமென்பதால் இந்த மிஸ்டர். லோக்கல் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் ஒரு சிங்கள் டிராக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுருந்த நிலையில் இப்போது இந்த படத்தின் கலக்கலு மிஸ்டர் லோக்கலு என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள இந்த பாடல் வெளியான கொஞ்ச நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த மிஸ்டர். லோக்கல் படம் வருகிற உழைப்பாளர் தினமான மே 1-ந் தேதி பிரமாண்டமாக  திரைக்கு வர உள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan