தனது பெயர் கொண்ட பெவிலியனை திறக்க மறுத்த தோனி

share on:
Classic

ராஞ்சியில் தனது பெயர் சூட்டப்பட்ட பெவிலியனை திறந்து வைக்க தோனி அன்புடன் மறுப்புத் தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராஞ்சியில் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பெவிலியனுக்கு தோனியின் பெயரை மாநில கிரிக்கெட் சங்கம் சூட்டியுள்ளது. இதனை திறந்து வைக்க தோனியை அவர்கள் அழைத்தபோது அவர் அன்புடன் மறுத்துள்ளார். அந்த பெவிலியனை திறந்துவைத்தால் சொந்த ஊரில் அந்நிய நபர் போல் தெரிவேன் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

sajeev