”சேப்பாக்கம் போன்ற பிட்சில் விளையாட விரும்பவில்லை”

share on:
Classic

சேப்பாக்கம் மைதானம் குறித்து 2வது முறையாக தோனி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் 7விக்கெட் வித்யாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றது. அதன்பிறகு பேசிய கேப்டன் தோனி, சென்னை ஆடுகளத்தின் ‘பிட்ச்’ மிகவும் மோசமாக உள்ளதாகவும், முதல் நாள் ஆட்டத்தில் இருந்தது போலவே இம்முறையும் பிட்ச் இருந்தது எனவும் தெரிவித்தார். 

மேலும், நாங்கள் புகார் கூறிக்கொண்டே வெற்றிப்பெறுகிறோம்.  மிகவும் குறைந்த ஸ்கோர் மட்டுமே எடுக்க முடிகிறது, இது போன்ற பிட்சில் நாங்கள் விளையாட விரும்பவில்லை என தோனி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind