10,000 ரன்களை கடந்து சாதனை படைத்த தோனி...

share on:
Classic

ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் தோனி.

மோசமான ஆட்டம் : 

ஆசிய போட்டிகளில் 10,000 ரன்களை எட்டிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தோனி மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தார். அவர் 10,000 ரன்களை கடந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்திய அணிக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
 

Image result for dhoni out

மைல்கல்லை எட்டிய தோனி: 

9,999 ரன்களை பெற்றிருந்த தோனி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு ரன் அடித்து 10,000 ரன்களை பெற்றார். இதன் மூலம் 10,000 ரன்களை பெற்று சர்வேதச அளவில் 13-வது வீரர் எனவும், இந்திய அளவில் 5-வது வீரர் என்ற பெருமையும் தோனி அடைந்திருக்கிறார். இதற்கு முன் சச்சின் 18,426 ரன்கள், கங்குலி 11,221 ரன்கள், டிராவிட் 10,768 ரன்கள் மற்றும் விராட் கோஹ்லி 10,232 ரன்களையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10,000 ரன்களை பெற்ற இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான சங்ககாரா 10,000 ரன்களை பெற்ற முதல் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Image result for dhoni out

10,000 ஒருநாள் கிரிக்கெட் ரன்கள் குவித்து ஓய்வை அறிவிக்காமல் இப்போது வரை விளையாடி வரும் வீரர்கள் மொத்தம் 2 பேர் மட்டுமே. ஒருவர் விராத் கோலி, மற்றொருவர் தோனி. இந்த 2 பேரும் இந்திய கிரிக்கெட் அணியின் தூண்கள் என்பது நமக்கு கிடைத்த பெருமை. சச்சின், சங்கக்காரா, ரிக்கி பாண்ட்டிங், சனத் ஜெயசூரியா, மஹேலா ஜெயவர்தனே, இன்சமாம் உல்-ஹக், ஜாக்ஸ் கல்லீஸ், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், பிரயன் லாரா மற்றும் திலகரத்னே தில்ஷான் ஆகியோர் முந்தைய ’10,000 ரன் நட்சத்திரங்கள்’ ஆவர்.

ரசிகர்களின் குழப்பத்திற்கு விளக்கம் :  

இந்த சாதனைக்கு முன்னதாகவே தோனியின் மொத்த ரன்கள் 10,173  . ஆனால் 174 ரன்கள் ஆப்பிரிக்க லெவன் அணிக்கு எதிராக ஆசிய லெவன் அணிக்கு தோனி சேர்த்த ஸ்கோர் தான் அது. இது சர்வேதச ரன்னில் சேராது. எனவே 9,999 ரன்கள் தான் தோனியின் சர்வேதச ஸ்கோராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

youtube