ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிடும் தோனி..வைரலாகும் வீடியோ  | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிடும் தோனி..வைரலாகும் வீடியோ 
close
முகப்புஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிடும் தோனி..வைரலாகும் வீடியோ 

ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிடும் தோனி..வைரலாகும் வீடியோ 

ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிடும் தோனி..வைரலாகும் வீடியோ 

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்தவீரரான மகேந்திர சிங் தோனி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் கோப்பை முத்தரப்பு டி20 தொடரில் தோனி, கோலி, புவனேஷ்வர் குமார், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் அடுத்து ஐபிஎல் தொடரில் கலக்க தயாராகவுள்ளனர். 

இந்நிலையில், விக்கெட் கீப்பரான தோனி, தனது ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அனைத்தையும் சேர்த்து ஒரு வீடியோ பதிவை தோனி தனது இன்ஸ்க்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

இதேபோல், இந்திய கேப்டன் விராட்கோலியும் அனுஷ்கா சர்மாவுடன் தனது ஓய்வு நேரத்தை கழித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலி அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதை போல், தற்போது அனுஷ்கா சர்மாவும் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.