உலக பணக்காரர்களின் பட்டியலில் 13வது இடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி..!!

share on:
Classic

உலக பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 13வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக பத்திரிகையான போர்பஸ், 2019ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 106 கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, 6 இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில் விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 36வது இடத்திலும், ஹெச்.சி.எல். இணை நிறுவனர் சிவ் நாடார் 82வது இடத்திலும், ஆர்ச்சிலர் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் 91வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் 131 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

News Counter: 
100
Loading...

vinoth