அனிலை அரவணைப்பாரா முகேஷ்?... ரிலையன்ஸ் வட்டாரத்தில் புதிய சலசலப்பு

Classic

கடன் பிரச்சனையால் தவிக்கும் அனில் அம்பானிக்கு அவரது சகோதரர் முகேஷ் அம்பானி உதவி செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொழில் விரிவாக்கத்திற்காக பலரிடமிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் ’ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், இந்நிறுவனத்தின் தலைவரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானி தற்போது இக்கட்டான நிலையில் தவித்து வருகிறார்.

போதிய கையிருப்பு ரொக்கம் இல்லாததால் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட முடிவு செய்தார் அனில் அம்பானி. கடனை திருப்பிச் செலுத்த 270 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும் நிலையில் அனிலின் சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டு நிற்கிறது. இந்நிலையில், அனிலுக்கு முகேஷ் அம்பானி நிதியுதவி செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாயிலாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலாவதை தடுக்க முகேஷ் விரைவில் உரிய முடிவெடுப்பார் என்றும் வணிக உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

News Counter: 
100
Loading...

mayakumar