முளைக்கீரையின் மகத்தான மருத்துவம்..!!

share on:
Classic

பச்சைக்கீறை வகைகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சத்து மற்றும் ஆற்றலை தருகிறது. அந்த வகையில் இந்த முளைக்கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை காணலாம்.

முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது. மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது நமது உடலில் ஓடும் இரத்தத்தை சுத்தம் செய்துவதோடு, இதில் உள்ள இரும்புச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. எனவே இக்கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது. வானிலை மாற்றம், கிருமி தொற்று போன்ற காரணங்களால் ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை போக்க கீரையை சமைத்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் போன்றவை குணமாகும்.

பசியின்மை பாதிப்பு உள்ளவர்களுக்கு முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ததுக் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைபாடு தீர்ந்து நல்ல பசி உண்டாக்கும். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan