IPL : மும்பையிடம் மீண்டும் தோற்றது சென்னை..!

share on:
Classic

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை சேப்பாக்கத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அப்பத்தி ராயூடு 42 ரன்களும் கேப்டன் தோனி 37 ரன்களும் எடுத்தனர்.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 18.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த சென்னை அணி இன்று நடைபெற உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோத உள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind