கேதார்நாத் திரைப்பட சர்ச்சைக்குறித்து மும்பை உயர்நீதிமன்றம் நாளை விசாரணை

share on:
Classic

கேதார்நாத் திரைப்படம், மத உணர்வுகளை புண்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கு, மும்பை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. அபிஷேக்கபூர் இயக்கத்தில் தயாரான இந்தப்படம், 2013ம் ஆண்டு, கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங் ராஜ்புத், சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்தப் படம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind