4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி..!

share on:
Classic

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில், டாஸ்வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான டி காக் 29 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்களான டு பிளசிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், வாட்சன் நிலைத்துநின்று விளையாடினார். சுரேஷ் ரெய்னா 8 ரன்னிலும், ராயுடு ஒரு ரன் மற்றும் தோனி 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பிராவோ 15 ரன்கள் குவித்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது, வாட்சன் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தபோது, மலிங்கா வீசிய பந்தில் தாக்கூர் அவுட்டானார். இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றிபெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாகவும், ஆன்ட்ரூ ரஸ்ஸல் தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

News Counter: 
100
Loading...

vinoth