க்ருனால் பாண்டியாவிற்கு வக்காளத்து வாங்கும் மும்பை இந்தியன்ஸ்...!

share on:
Classic

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் க்ருனால் பாண்டியாவிற்கு ரன் எடுக்க வாய்ப்பளிக்காததை அடுத்து 'தினேஷ் கார்த்திக்கை வறுத்தெடுத்துள்ளது 'மும்பை இந்தியன்ஸ் அணி'. 

அதிர்ச்சி தோல்வி !
இந்திய அணியுடனான மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்றது. இந்திய அணி கேப்டன் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக துணை கேப்டன் 'ரோஹித் சர்மா' கேப்டன் பதவியை ஏற்று வழி நடத்தினார். இந்நிலையில், இத்தொடரின் தோல்வி இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறுதி போட்டியின் போது கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக்கும், க்ருனால் பாண்டியாவும் களத்தில் இருந்தனர். 

 

வாங்கி கட்டிக் கொண்ட கார்த்திக் :
முதல் இரண்டு பந்துகளில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுக்க க்ருனால் தயாராக இருந்த போதிலும் ஓடுவதற்கு கார்த்திக் மறுத்து விட்டார். ஆல்-ரவுண்டரான க்ருனால் அந்த  ஆட்டத்தில் 12 பந்துகளில் 25 ரன்கள் என சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். எனினும், அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்து விட்டார் கார்த்திக். இதற்காக கிரிக்கெட் ரசிகர்களிடம் அவர் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார். இது போதாதென்று, மும்பை இந்தியன்ஸ் அணி க்ருனாலின் சார்பாக தற்போது களம் இறங்கியுள்ளது. 

 

மும்பை இந்தியன்ஸ் பதிவு :
டுவிட்டரில் பதிவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி "13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த பிறகும் கடைசி ஓவரில் ஒரே பந்து தான் க்ருனாலுக்கு கொடுக்கப்பட்டது. ஹார்ட் லக் (Hard Luck) க்ருனால் பாண்டியா" என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம், இந்த வருடம் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் க்ருனால் தேர்வு செய்யப்பட்டுள்ளது தான் என்பது கூடுதல் தகவல்.

 

News Counter: 
100
Loading...

priya