மும்பை இண்டியன்ஸ் அணி புதிய உலக சாதனை...!

share on:
Classic

"டி20 கிரிக்கெட் அரங்கில் 200 போட்டிகளில் விளையாடியுள்ள முதல் அணி" என்ற பெருமையை மும்பை இண்டியன்ஸ் அணி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை அணிக்கெதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இப்போட்டியானது மும்பை இண்டியன்ஸ் அணிக்கு 200-வது கிரிக்கெட் போட்டியாகும். இதன் மூலம், "சர்வதேச அளவில் 200 டி20 கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கிய உள்ளூர் அணி" என்ற மாபெரும் கௌரவம் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு இப்போது  கிடைத்துள்ளது. இந்த பட்டியலில், 199 போட்டிகளுடன் சாமர்செட் அணி 2-வது இடத்திலும், 194 போட்டிகளுடன் ஹாம்ஷைர் அணி 3-வது இடத்திலும், 188 போட்டிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4-வது இடத்திலும், சசெக்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா 187 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. 

News Counter: 
100
Loading...

mayakumar