மும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!

share on:
Classic

மும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே உரான் பகுதியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் வழக்கம் போல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென கச்சா எண்ணெய் கழிவுகள் சேமித்து வைக்கும் கிடங்கில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பகுதி என்பதால் தீ அங்கிருந்து வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் ஆலையிலிருந்த ஊழியர்களை அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan