விளாசித்தள்ளிய மும்பை அணி... 188 ரன்கள் வரை தாக்குப்பிடிக்குமா ராஜஸ்தான்?...

share on:
Classic

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை அணிக்கெதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் பேட்டிங் தரப்பில் அதிகபட்சமாக குயிண்ட்டன் டி காக் 81 ரன்களையும், கேப்டன் ரோகித் ஷர்மா 47 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் பவுலிங் தரப்பில் ஆர்ச்சர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 188 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்குகிறது. 

News Counter: 
100
Loading...

mayakumar