பா.ஜ.கவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது : தமிழிசைக்கு முரசொலி நாளிதழ் கண்டனம்..

share on:
Classic

பா.ஜ.கவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்ததற்கு முரசொலி நாளிதழ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

பா.ஜ.க. வுடன் திமுக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக தமிழிசை சவுந்திரராஜன் அண்மையில் தெரிவித்தார். தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்கு திமுக மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் இன்று வெளியான முரசொலி நாளிதழ், தமிழிசை சவுந்திரராஜனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் பா.ஜ.க வுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அதை ஒரு தலைவர் பகிரங்கமாக கூறுவாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அரைகுறைகளை தலைவராக்கினால் இப்படித்தான் ஏதேவாது ஒன்றை உளரிக் கொட்டுவார் எனவும் முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. தமிழகத்தின் அரசியல் கட்சியோடு தனது கட்சி பேச்சுவார்த்தை நடத்துவது தமிழிசைக்கே தகவலாகத்தான் தெரியும் என்றால் அது வெட்கக்கேடல்லவா என்றும் முரசொலி நாளிதழ் சாடியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya