மதத்தை விட மனிதநேயமே பெரிது : ரம்ஜான் நோன்பை பாதியிலேயே முடித்து ரத்ததானம் வழங்கிய இளைஞர்..!!

share on:
Classic

மதத்தை விட மனிதாபமானமே முக்கியம் என்று முஸ்லீம் நண்பர் ஒருவர் தனது ரம்ஜான் நோன்பை பாதியிலேயே முடித்து ரத்த தானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரம்ஜான் பண்டிக்காக பொதுவாக முஸ்லீம்கள் ஒவ்வொரு நாளும் சூரிய உதயமாவதிலிருந்து மறையும் வரை அவர் நோன்பு மேற்கொள்வது வழக்கம். அதேபோல் அசாம் மாநிலத்தின் மங்கல்டோய் என்ற பகுதியில் வசித்து வரும், பனவுல்லா அகமது என்ற இளைஞர் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு மேற்கொண்டுள்ளார். ஆனால் கடந்த வாரம் அவருக்கு தொலைபேசி அழைப்பு காரணமாக மதத்தை விட மனிதாபிமானமே முக்கியம் என்று தனது நோன்பை பாதியிலேயே முடித்துள்ளார். ஏன் தெரியுமா, இந்து மதத்தை சேர்ந்த நண்பருக்கு ரத்தம் கொடுக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார்.

அகமதுவின் நண்பரான டபாஷ் பகவதியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அசாமை சேர்ந்த ரஞ்சன் கோகாய் என்பவர், கவுகாத்தியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் வழங்க யாரும் இல்லாததால், அவரது நண்பரான டபாஷ் பகவதி, அகமதுவின் உதவியை நாடியுள்ளார். எனவே, அவர் நோன்பை பாதியிலேயே முடித்து உணவு சாப்பிட்டுள்ளார். அகமது, டபாஷ் இருவருமே டீம் ஹியூமானிட்டி (Team Humanity) இந்தியா என்ற பிரபல பேஸ்புக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் இருவருமே வழக்கமாக ரத்த தானம் செய்பவர்கள் தான். 

நோன்பு நேரத்தில் ரத்தம் வழங்கலாமா என்று அகமது தங்கள் மதத்தை சேர்ந்த சில நபர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதனால் அவருக்கு உடல்நலம் பாதிக்கக்கூடும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் ரத்து தானம் வழங்கியுள்ளார் என்று பேஸ்புக் குழுவினர் இருவரின் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். முழு உடற்தகுதி உடையவர்கள் ரத்து தானம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

News Counter: 
100
Loading...

Ramya