இஸ்லாமியர்கள் வழிபடும் குகை அம்மன்..!!

share on:
Classic

பாகிஸ்தானில் இந்து மதக் கோவில் என்றும் பார்க்காமல் ஹிங்கிளா தேவி எனும் அம்மன் கோவிலை இஸ்லாமிய மக்கள் வழிபட்டு கொண்டாடுகிறனர். மத வேற்றுமையை தகர்த்தெறியும் சிறப்பு மிக்க கோவிலாகவும் விளங்குகிறது.

இஸ்லாமிய நாட்டில் இந்து கோவில்:
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாகும். அந்நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சில இந்து மத மக்களும் வாழ்கின்றனர். அவர்கள் வழிபடுவதற்கென இந்து மதக் கோவில்களும் இருக்கின்றது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ‘லயரி தெஹ்ஸில்’ எனும் மலைப்பகுதியில் உள்ள குறுகிய பள்ளத்தாக்கில் உள்ளது ஹிங்லஜ் மாதாவின் இந்த குகைக் கோயில். இது ‘ஹிங்கோல் தேசிய பூங்காவுக்கு’ நடுவில் அமையப்பெற்ற ஒரு இந்து கோவிலாகும்.

 

இஸ்லாமியர்கள் கொண்டாடும் அம்மன் :
இந்தியாவில் எப்படி இந்து மக்கள் இஸ்லாமிய கடவுளின் மீது நம்பிக்கை வைத்து மசூதிகளுக்குச் செல்வதும், உடல்நிலை பிரச்சனைகளுக்கு வேண்டிக்கொள்கிறார்களோ, அதைப்போல பாகிஸ்தானில் இஸ்லாமியர்களும், பலூசிஸ்தானில் இருக்கும் ஹிங்கிளா தேவி கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கி வேண்டிக்கொள்கின்றனர். அங்குள்ள இந்து மக்கள் இந்த ஹிங்கிளா தேவி அம்மன் கோவிலை ‘ஷக்தி பீத்’ என்றும் ‘தேவி மந்திர்’ என்றும் அழைக்கின்றனர். அதுபோல் அங்கு வரும் இஸ்லாமிய மக்கள் ‘நானி’ அல்லது ‘பிபி நானி’ கோவில் என்றும் அழைக்கின்றனர்.

கோவில் அமைந்த கதை :
பிரஜாபதி தக்‌ஷா என்பவருக்கு பிறந்தவர் சதி தேவி, தந்தையின் விருப்பத்திற்கு எதிராக சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனால், பிரஜாபதி தக்‌ஷா, தான் நடத்திய மகா யாகத்துக்கு மகள் சதியையும் சிவனையும் அழைக்கவில்லை. இதை அறிந்த சதி சிவனை அழைத்துக்கொண்டு அவ்விடத்துகு சென்றார். ஆனால் பிரஜாபதி அவரை அங்கு அனுமத்திக்கவில்லை, மேலும் சிவனை அவமானப் படுத்திவிட்டார். இதனைப் பொருத்துக்கொள்ள முடியாத சதி தன் மொத்த சக்தியையும் கோபமாக வெளியெற்றி அங்கேயே இறந்துவிட்டார். இதனைப் பார்த்து பொருத்துக்கொள்ள முடியாத சிவனோ, பிரஜாபதி தக்‌ஷனை கொன்று பிரபஞ்சத்தையே உலுக்கினார் எனக் கூறப்படுகிறது. கடைசியாக, இறந்துபோன நிலையில் எரிக்கப்படாமல் இருந்த சத்தியில் உடலை விஷ்னு 108 துண்டுகளாக சிதரடித்தார் என்றும், அதில் 52 பாகங்கள் பூமியிலும், மீத பாகங்கள் அண்டத்தில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சதி தேவி இறந்துப்போன இடமாக கருதப்படும் அந்த ஹிங்கோல் ஆற்றங்கரையிலேயே அவருக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

 

கோவிலின் சிறப்பு :
ஹிங்ளா மாதா மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அங்குள்ள மக்களால் பார்க்கப்படுகிறது. மத வேறுபாடுகளை உடைத்து இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படக்கூடிய இந்து கோவிலாக இருப்பதே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இதன் காரனமாக ஹிங்கிளா மாதா கோவில், அங்கு வரும் சுற்றுலாப் பயனிகளால் பெரிதும் ஈர்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

youtube