அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..

share on:
Classic

நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் என்று இம்ரான் கானுக்கு மோடி பதிலளித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு மீண்டும் பிரதமராக உள்ள மோடிக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மோடியை தொலைபேசி தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் மக்களின் நலனுக்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த இம்ரான் கானுக்கு நன்றி கூறிய மோடி, அண்டை நாட்டுடன் இணைந்து செயல்படும் அவரின் கொள்கைக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் அமைதி மற்றும் வன்முறை, தீவிரவாதம் இல்லாத சூழலை உருவாக்குவதே ஒரு நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அவசியமாகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் ஜெயிஷ் இ தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் தொடர்ந்து பதற்றம் நீடித்தது. அதன்பின்னர்,முதன்முறையாக மோடி, இம்ரான் கான் இருவரும் ஒருவருடன் ஒருவர் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya