ஒரு மர்ம மனிதன் டி பி கூப்பர்...!

share on:
Classic

ஓடும் விமானத்தை சிறைபிடித்து வைத்து பின் தப்பி ஓடிய டான் கூப்பரை தேடிப்பிடிக்க முடியவில்லை என்று எஃப்.பி.ஐ அறிவித்துள்ளது.

போயிங் 727100- விமானத்தை பயணிகளுடன் கடத்தி 2 லட்சம் அமெரிக்க டாலர்களை பிணயத் தொகையாக பெற்று விமானத்தில் இருந்து தப்பிச் சென்றவர் டிபி கூப்பர். எஃப்.பி.ஐ போன்று பல்வேறு துறையினர் தேடியும்  அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. 45 ஆண்டுகள் கடந்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், விசாரணை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது எஃப்.பி.ஐ.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான புஷ், பராக் ஒபாமா, டிரம்ப் ஆகியோரது முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது. எஃப்.பி.ஐ-ல் சுமார் 35,104 பேர் உளவாளியாக செயல்பட்டு வருகின்றனர். குற்றம் நடக்காமல் தடுப்பதும், குற்றம் நடந்தாலும் குற்றவாளியை சரியாக பிடிப்பதும் இதன் முதன்மையான வேலையாகும்.

கூப்பரின் சாமர்த்தியம்.

1971 ஆண்டு டான் கூப்பர் தனி மனிதனாக சியாட்டில் செல்வதற்கு வந்தார். விமானம் கிளம்பியதும் அருகில் இருந்த ஓர் பெண்னிடம் அவர் ஓர் துண்டு சீட்டை கொடுத்தார் அதில் நான் இந்த விமானத்தை கடத்த போகிறேன் என்று அதில் எழுதி இருந்தது. டான் கூப்பர் அலட்டிக்கொல்லாமல் அமைதியாக அவருடய பையை திறந்தார் அதில் பல வெடிகுண்டு இருந்துள்ளது.

சிறிது நேரத்தில் அவர் விமானத்தை கடத்தினார். இதை அறிந்த அமெரிக்காவே மிரண்டது டான் கூப்பரிடம் பேசுவதற்கு பல அதிகாரிகள் முன் வந்தனர் டான் கூப்பர் 2லட்சம் அமெரிக்கா டாலர் மற்றும் 4 பாராச்சூட்டும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் கேட்டது அனைத்தும் கிடைத்ததாள் பயணிகல் அனைவரையும் அனுப்பி வைத்தார். இறுதியில் விமான ஓட்டுநர் மற்றும் பணிப்புரியும் பெண்களையும் 4 இன்ஜினீயர்களையும் வைத்துக்கொண்டு மெக்ஸிக்கோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

கூப்பரின் திறமை.

கூப்பர் சென்று கொண்டிருந்த விமானத்தின் மேல் ஒன்றன் கீழ் ஒன்றாக என இரண்டு ராணுவ விமானங்களும் பின் தொடர்ந்தன. மேலும், சிறிது இடைவெளி விட்டு மற்றொரு விமானமும் கூப்பரை பின்தொடர்ந்து சென்றது. விமானத்தில் இருந்தவர்களை காக்பீட்டிற்குள் அனுப்பி வெளியே வரக் கூடாது என மிரட்டினார் கூப்பர். இரவு 8:13 மணிக்கு சட்டென்று விமானத்தின் பின் பகுதியில் எடை குறைந்தது.

நெபேடா விமான நிலையத்தில் தரையிரங்கிய போது, கூப்பர் விமானத்தில் இல்லை. அவர் எப்படி தப்பினார் என்றும் தெரியவில்லை. கூப்பரை கண்கொத்தி பாம்பு போல பின் தொடர்ந்த 3 ராணுவ விமானங்கள் கண்களிலும் தென்படவில்லை. அவர் எப்படி தப்பினார் என்று அனைவருக்கும் கேள்விகள் எழுந்தன. பல ஆண்டாக தேடியும் டான் கூப்பர் கிடைக்க வில்லை. 

எஃப்.பி.ஐ முதலில் கண்ட தோல்வி.

20ஆம்  நூற்றாண்டு முதல் 21ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேடிய போதும், எந்த ஒரு தகவலும் கிடைக்காததால், வழக்கை முடித்துக் கொள்வதாகவும், முதல்முறையாக எஃப்.பி.ஐ தோல்வியை ஏற்றது.

பல்வேறு நாடுகளில் குற்றங்கள் நடந்தாலும், அனைத்தையும் கண்டுபிடிக்கும் எஃப்.பி.ஐ தனது நாட்டில் நடந்த குற்றத்தை கண்டுபிடிக்க முடியாமல் முதன் முதலில் கோட்டை விட்டது. டிபி. கூப்பர் முன்பே திட்டமிட்டு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் இப்படித்தான் செல்ல வேண்டும் சரியாக கணித்து குதித்துள்ளார், அவர் இன்றும் உயிருடன் தான் இருப்பார்.

நடக்கும் நிகழ்வுகளையும் அவர் பார்த்துக் கொண்டுதான் இருப்பார் என்று கூறுகின்றனர். கூப்பர் பாணியை பின்பற்றி நடந்த அனைத்து கடத்தல்களும் தவிடு பொடியாகின. யாராலும் கூப்பரை மிஞ்ச முடியவில்லை. மேலும் இது கூப்பரின் பெயரை உலகிற்கு எடுத்து சென்றது.

News Counter: 
100
Loading...

sasikanth