4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..!

share on:
Classic

அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் ரேவதி, சூலூரில் விஜயராகவன், ஒட்டப்பிடாரத்தில் அகல்யா, அரவக்குறிச்சியில் செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 4 தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தாத நிலையில், நாம் தமிழர் கட்சியில் இரண்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind