இத்தாலி ஓபன் : ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் நடால்..!

share on:
Classic

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சும் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட் ஆட்டத்தை 6 - 0 என்ற செட் கணக்கில் நடால் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தை  6 - 4 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச் கைப்பற்ற மூன்றாம் செட் ஆட்டம் அனல் பறந்தது. இறுதியில் நட்சத்திர வீரர் நடால் 6 - 1 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

 

News Counter: 
100
Loading...

aravind