பிரெஞ்சு ஓபன் : இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்

share on:
Classic

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மோதினர். இதில், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் முதல் செட்டை 6 - 3, 6 - 4,  6 - 2 என்ற நேர் செட்களில் ரோஜர் பெடரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் சுமார் 11 ஆண்டுகளில் சந்திக்காத தோல்வியை ரோஜர் பெடரர் சந்தித்துள்ளார்.    

இதே போல, பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டி, அமெரிக்காவின் அன்சிமோவாவை 6 - 7, 6 - 3, 6 - 3 என்ற செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் மார்கெடா வான்ரோசோவா, பிரிட்டனின் ஜோஹானா கோண்டாவை 7- 5, 7- 6 என்ற செட்களில் விழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind