நடிகர் சங்கம் கட்டிட வழக்கு : தீர்ப்பு 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு..!

share on:
Classic

பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை தி.நகர் அருகேயுள்ள அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும், 33 அடி அகல சாலை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு ரூ. 26 கோடி செலவில் கட்டிடம் கட்டுவதால் அந்த முடிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டிடப்பணிகளை மேற்கொள்ள தடைவிதித்து இருந்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என தெரிவித்ததால், தடை நீக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan