நடிகர் சங்க தேர்தல் : பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு..!

share on:
Classic

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் பிறபித்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு பதிவாளரின் உத்தரவை ரத்து செய்து தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஆனால், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண கூடாது என்றும், வாக்கு பெட்டிகளை பாதுகாத்து வைக்கவும் ஜூன் 21-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வாக்குகளை எண்ண அனுமதி அளிக்க வேண்டும் என்ற விஷால் தரப்பின் கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். மேலும், வாக்குரிமை மறுக்கப்பட்ட பெஞ்சமீன் உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் விசாரணைக்கு நீதிபதிகள் எடுத்துக் கொண்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan