நடிகர் சங்க தேர்தல் : இரு அணிகள் ஒரே நேரத்தில் வாக்கு சேகரிப்பு..!

share on:
Classic

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சின்னத்திரை நடிகர்கள் சங்க செய்தியாளர்கள் சந்திப்பில் இரு அணிகள் ஒரே நேரத்தில் வாக்கு சேகரித்தனர்.

பாண்டவர் அணி சார்பில் நடிகர் நாசர், மனோபாலா, ஸ்ரீமன் உள்ளிட்டோரும், சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பில் ஐசரி கணேஷ், குட்டிபத்மினி, நடிகர் உதயா, சங்கீதா உள்ளிட்டோர் சின்னத்திரை நடிகர்களிடம் வாக்கு சேகரித்தனர். அப்போது, சின்னத்திரை நடிகர் சங்க கோரிக்கையான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு கட்டணம் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என நாசர் வாக்குறுதி அளித்தார்.

சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பொதுச் செயலாளராக போட்டியிடும் திரு. ஐசரி கணேசன், தென்னந்திய நடிகர் சங்கத்தில், சின்னத்திரை நடிகர்கள் உறுப்பினர்களாக சேர்வதற்கான கட்டணத்தை 25 ஆயிரமாக குறைக்கப்படும் என்ற ஒப்பந்தத்தை சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மனிடம் கொடுத்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan