நடிகர் சங்கத் தேர்தல் : சுவாமி சங்கரதாஸ் அணி கமல்ஹாசனுடன் சந்திப்பு..!

share on:
Classic

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனை, பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் சந்தித்து நடிகர் சங்கத் தேர்தலில் ஆதரவு கோரினர்.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், நாசர் தலைமையிலான பஞ்சபாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினரும் களமிறங்குகின்றனர். பாக்யராஜ் தலைமையிலான அணியினர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேற்று சந்தித்து ஆதரவு கோரினர்.

இதனைத்தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில், அந்த அணியினர் சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது, பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், நிதின் சத்யா, ஷியாம், ரமேஷ் கண்ணா ஆகியோரும் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan