வரும் 14-ஆம் தேதி நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம்..!

share on:
Classic

நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 14-ஆம் தேதி மாலை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற இருப்பதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால், 6 மாத காலம் அவகாசம் கோரப்பட்டது. இந்த கால அவகாசம், ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 28-ம் தேதி கூடிய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில், தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், மே-14 ம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan