அலோக் வர்மா நீக்கம்..! சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமனம்

Classic

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவை மத்திய அரசு நியமித்துள்ளது.

சி.பி.ஐ. இயக்குநராக பதவி வகித்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தானா ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இடைக்கால சிபிஐ இயக்குநராக பதவியேற்ற நாகேஸ்வர ராவ், அலோக் வர்மா அணியை சேர்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சிபிஐ இயக்குநராக மீண்டும் பதவியேற்ற அலோக் வர்மா, நாகேஸ்வரராவ் பிறப்பித்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்தார். இதனிடையே, அலோக் வர்மாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக உயர்நிலைக் குழு, ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய குழு இதுகுறித்து விவாதித்தது. இதையடுத்து, அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து நீக்கி நியமனக்குழு உத்தரவிட்டுள்ளது. புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth